தமிழை முறையாக கற்கும் படிமுறைகள்


தமிழ் கற்பதின் ஆதி அந்தம் என்ன ?

பாயிரம்


தமிழ் கற்பதை பெரும்பாலோர் ஏதோ மொழி கற்பதாக மட்டுமே எண்ணுகின்றனர். அதன் பயன்பாடும் பேச்சளவிலும் வாசித்து புரிந்துகொள்ளும் அளவிலும் தான் இருக்கிறது.

ஆனால் தமிழ், வேல் போல் எவ்வளவு ஆழ்ந்து, அகன்று, நுணுக்கமாக அமைக்கப் பட்டிருக்கின்றது என்று அறிந்தால் ஆச்சிரியப்படுவீர்கள். தமிழில் ஒரு கருத்தை நம்மால் தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்க இயலும். தமிழ், இலக்கணத்தின் முழுமையை கொண்டுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தமிழை தொல்காப்பியம் போன்ற மூல நூல்களின் ஊடே பார்க்கும்பொழுது அதன் அமைப்பில் வாழ்வியல் விதிகள், மாபெரும் அறிவியல், அண்டத்தின் ரகசியங்கள் போன்றவை பொதிந்துள்ளதை அறியலாம்.  அதுமட்டுமின்றி தமிழ்மொழி மொழி, செம்மொழி மற்றும் அறிவியல் மொழியை கடந்து அதுவே அறிவியலாகவும் விளங்குகின்றது
சுருக்கமாக கூறின் தமிழை முறையாக கற்றால் சிறந்த மொழி ஆளுமையும்  உயரிய ஞானமும் பெற்று சகலகலா வல்லவனாக திகழலாம். அதனால்தான் அறிஞர்களும் மொழி ஆய்வாளர்களும் தமிழ்மொழி கற்கும்பொழுது ஆழமாக கற்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

இப்போது வினாவின் பதிலுக்கு வருவோம். தமிழை முறையாக கற்கும் படிமுறைகள் என்ன ?


இதன் பதில் எனக்கு இலங்கை ஜெயராஜ் அவர்கள் விளக்கிய பரிமேலழகர் உரை வழி திருக்குறள் என்ற பதிவின் மூலம் கிடைத்தது. அதில் ஒரு பகுதி தான் தமிழை பற்றி கூறப்பட்டிருக்கின்றது

இந்த பதிவில் 55 : 35 நிமிடத்திலிருந்து 1 : 08 : 00 நிமிடம் வரை பாருங்கள்


ஆக இதுவே பதிவில் கூறப்பட்ட படிமுறைகள் :
1. அட்சரம் ( எழுத்து ) கற்க வேண்டும் ------ வரிவடிவமும் ஓசையும்
2. சொல் ------ அகராதி / நிகண்டு
3.  கருவி நூல்கள
    #  இலக்கணம்
    #  தர்க்கம்
4. இலக்கியம்

அடுத்ததாக என்ன...................................................................................
5. தத்துவம் !?!?!?!?!?!?!?!?!?!?!?

இதுவே தமிழில் கற்கவேண்டிய இறுதி பாடத்திட்டம் ( Syllabus )

ஆனால், இங்குதான் உண்மையான படிப்பே ஆரம்பிக்கின்றது......

தத்துவம் என்பது தத் மற்றும் த்வம் என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். தத் என்றால் அது. த்வம் என்றால் நீயே என்று அர்த்தம்.
தத்துவம் என்றால் அது நீயே என்று பொருள் தமிழில்.

தத்துவம் என்றால் என்ன என்ற விளக்கத்தை அறிய இங்கே சென்று பார்க்கவும்.
https://tamil.oneindia.com/art-culture/essays/subavee-s-arinthum-ariyamalum-part-12-206447.html

தத்துவங்களின் சிறப்பு என்னவெனில் அது வெறும் எடுகோளாக மட்டும் இல்லாமல் தக்க சான்றுகளுடன் தெளிவுப்படுத்தும். அது நமது நடைமுறை வாழ்வினை ஒட்டியும் விளக்கப்படுவதால் புரிந்துகொள்ள ஏற்புடையதாகவும் இருக்கும்.

தத்துவங்கள் வாழ்வியலை கடந்து மெல்ல மெல்ல வாழ்விற்கு மூலமாக திகழும் கடவுளிடம் கொண்டு செல்லும்.
எ.கா. சித்தாந்தம் , வேதாந்தம்---இதிலும் தத்துவ நூல்கள் உள்ளன
தத்துவங்கள் வெவ்வேறு சமயங்களுக்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கும். ஆனால் அனைத்தும் ஒரே இடத்திற்கு போய் சேரும் வெவ்வேறு பாதைகளே.

( தத்துவங்கள் படிக்க படிக்க அதுவே உங்களுக்கு ஆன்மீகத்தின் மீது ஈர்ப்பை உண்டாக்கும் )
6. இனிமேல் என்ன.............. அறிவுக்கு பின்,  அனுபவம் தான்



( பரிந்துரை மட்டுமே ) 
உமாபதி சிவாச்சாரியார் கூற்றின்படி உயரிய தமிழ் கற்க கீழ்கண்ட நூல்கள் பயிலவும்

1. திருக்குறள்----- திருவள்ளுவர்

2. திருவாசகம்----- மாணிக்கவாசகர்

3. தொல்காப்பியம்-----தொல்காப்பியர்

4. பரிமேலழகர் உரை ( திருக்குறள் )------பரிமேலழகர் 

5. திருதொண்டர் புராணம்----சேக்கிழார்

6. சிவஞான சித்தியார்------அருணந்தி சிவாசாரியார்

மேலும்,

தமிழ்மொழி எப்படி அறிவியலாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கவும்.








                                                                                                   







Comments